Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

இலங்கை ஏதிலிகளுக்கு பிரித்தானியாவில் குடியேறுவதற்கு வாய்ப்பு!

Top Post Ad

 


பல வருடங்களாக டியாகோ கார்சியா தீவில் கைவிடப்பட்டிருந்த இலங்கை ஏதிலிகள் அனைவரும் பிரித்தானியாவில் குடியேறுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.


பி.பி.சி வெளியிட்டுள்ள செய்தியில், குறித்த தீவில் தங்கி இருந்த 60 இலங்கைத் தமிழர்கள் 3 ஆண்டுகளின் பின்னர் தற்போது பிரித்தானியாவில் தங்க அனுமதிக்கப்படவுள்ளனர்.


இந்த தீவிலிருந்து பிரித்தானியாவில் குடியேறுவதற்கு விண்ணப்பித்த முதல் குடிசனம், இலங்கைத் தமிழர்களாகக் கருதப்படுகின்றனர்.


அவர்களின் விண்ணப்பம் கடந்த காலங்களில் பல தடவைகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.


எனினும் தற்போது பிரித்தானிய அரசாங்கம் தமது கொள்கையில் மாற்றம் செய்து, அவர்களை பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கத் தீர்மானித்திருப்பதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.


இந்தத் திட்டத்தின் குற்றப்பின்னணிகள் கீழ் எதுவும் இல்லாதவர்களின் குடும்பத்தினர் அனைவரும் நேரடியாக பிரித்தானியாவுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இதற்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு எதிர்வரும் 2 நாட்களுள் வெளியாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


@CM

Tags

ads