Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

றமழான் கால உலர் உணவு பொதிகள் கையளிப்பு.....



றமழான் மாதத்தில் எமது கமு/கமு/அல் அஷ்ரக் தேசிய பாடசாலையின் 77 ஆண்டு  

நிறைவினையொட்டியதாக கல்வி கற்கும் மாணவர்களில் சமூக பொருளாதார ரீதியில் விசேட கவனிப்பு செலுத்த வேண்டிய மாணவர்களை இனம்கண்டு அவர்களின் குடும்பத்தினருக்கு உலர் உணவு பொதிகளை வழங்கி வைக்கும் திட்டமொன்று ஏற்கனவே பழைய மாணவர் அமைப்பினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இத்திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் பொருட்டு 03.04.2023 அன்றைய தினம் எமது பழைய மாணவர் அமைப்பின் செயலாளர் அரச சட்டவாதி ஸக்கி இஸ்மாயில் அவர்களினால் அவருடைய தனிப்பட நிதியிலிருந்து தயார் செய்யப்பட்ட சுமார் 20 உலர் உணவு பொதிகள் பாடசாலையின் பிரதி அதிபர் எ.எ.எம். மஹ்தி அஸ்லம் மேர்சா அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இதன்போது எமது அமைப்பின் உப செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோரும் பங்கு பற்றியிருந்தனர்.

குறித்த 20 பொதிகளும் பாடசாலை முகாமைத்துவ சபையின் வழிகாட்டலில் பாடசாலை அதிபரினால் குறிப்பிட்ட  பயனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கி வைக்கப்படவுள்ளன.

இதேவேளை, எமது பழைய மாணவர் அமைப்பின்  கிளைகள் மற்றும் வகுப்பினரினால் தயார் செய்யப்படுகின்ற உலர் உணவு பொதிகளும் விரைவில் அதிபர் அவர்களிடம் கையளிக்கப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
Tags

ads