Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

ஓய்வு பெறுகிறார் SEENI MOHAMED ABDUL SAMAD !


நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அம்பியூலன்ஸ் ஓட்டுநராக கடமையாற்றிய நிந்தவூர் பிராந்தியத்தை பிறப்பிடமாக கொண்ட SEENI MOHAMED ABDUL SAMAD அவர்கள் கடந்த 2023/09/08 ஆம் திகதி தனது அனைத்து சேவையிலும் இருந்து ஓய்வினைப் பெற்றுள்ளார்.


2009 ஆம் ஆண்டு MA பட்டத்தினை பூர்த்தி செய்து யுத்த காலத்தில் கடும் சிக்களுக்கு மத்தியில் மாவட்ட பொது வைத்தியசாலை மன்னாரில் 3 வருடங்கள் பணியாற்றி


 பின்னர் கல்முனை சுகாதார சேவைகள் பணியகத்தில்  5 வருடங்கள் பணியாற்றிய பின்னர்


போக்குவரத்து துறையிலும் பணியாற்ற தொடங்கினார்.


இதன் அடிப்படையில் 

துபாய் போக்குவரத்து சபையில் 2 வருடங்கள் பணியாற்றி பின்னர் வீதி அபிவிருத்தி அதிகார சபையில் 3 வருடங்கள் பணியாற்றி


மீண்டும் சுகாதார துறைக்குள் இணைந்து


 தீக வாபி பிரதேச வைத்தியசாலையில் 2 வருடங்கள் பணியாற்றி பின்னர் இறுதியாக நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் 8 வருடங்கள் தனது உன்னதமான பணியினை நிகழ்த்தி இறுதியாக ஓய்வினை பெற்றுக்கொண்டார்.


இவ்வாறு சிறந்த முறையில் உன்னதமான பணியினை ஆற்றிய ABDUL SAMAD அவர்களுக்கு Citizen Media வின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Tags

ads