ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் (University of Oxford) இடம்பெற்ற, சமூக விஞ்ஞான, கல்வி மற்றும் மனிதநேயம் தொடர்பாக இடம்பெற்ற 4வது சர்வதேச மாநாட்டில் (4th International Conference on Social Science, Education and Humanities) இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி நிந்தவூரை பிறப்பிடமாக கொண்ட Kalanther Lebbe Mohamed Faizal கலந்து சிறப்பித்தார்.
ஓக்ஸ்போட் பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானம், கல்வி மற்றும் மனிதாபிமானம் தொடர்பான ஆய்விலே, தன்னால் சமர்ப்பிக்கப்பட்ட ஆராய்ச்சிக்கட்டுரை (Research Paper) தெரிவு செய்யப்பட்டதனால், இங்கிலாந்தில் அமைந்துள்ள St-Anne's College, University Of Oxford ல் கடந்த மூன்று தினங்களாக (20 - 22 November) நடைபெற்ற 4வது சர்வதேச மாநாட்டுக்கு பேச்சாளராக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
இவர் சட்டத்துறையில் (LLB) பட்டாதாரியினை பூர்த்தி செய்து, அதனைத் தொடர்ந்து சட்டத்துறையில் முதுமாணிப்பட்டத்தினையும் (LLM) பூர்த்தி செய்தார். அத்தோடு கடந்த 20 வருடங்களுக்கு மேலாக கல்வித்துறையில் விரிவுரையாளராக பணியாற்றியதோடு, தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள Prince City Campus எனும் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று பணிப்பாளராக வெற்றிகரமாக சேவையாற்றி வருவது குறிப்படத்தக்கது. மேலும் இது போன்ற பல ஆராய்ச்சி மாநாடுகளுக்கு பல நாட்டு பிரதிநிதிகளுடன் கலந்து கொள்வது மாத்திரமின்றி, அதன் மூலம் கிடைக்கும் அணுபவத்தினை தனது மாணவர்களுக்கு ஆலோசனையாக வழங்கி அவர்களை சிறந்த முறையில் வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்.
எனவே, நிந்தவூரினை பிறப்பிடமாக கொண்ட இவர் மேலும் பல வெற்றிகளை அடைய வேண்டும் என எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.