வட ஐக்கிய அமெரிக்காவின் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ஒன்றான ( THE RITZ-CARLTON ) நட்சத்திர ஹோட்டலில் பணி புரியும் நிந்தவூரை சேர்ந்த நிந்தவூர் பிரதேச சபையின் முன்னால் பிரதித்தவிசாளர் வை.எல். சுலைமாலெவ்வை, மற்றும் இஸ்மாயில் லத்தீபா ஆகியோரின் புதல்வரான சுலைமான் நாபிஃ அவர்கள் ஹோட்டல் துறையில் வழங்கப்படுகின்ற உயர் விருதான ஐந்து நட்சத்திர விருதினை ( FIVE STAR ) விருதினை பெற்றுக்கொன்டார்.
கடந்த வாரம் நடைபெற்ற ஹோட்டல் துறையில் சிறந்த சேவையாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில் food and beverage துறை சார்பாக அவர் முதன்மையானவராக இந்த உயர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார் கடந்த இரண்டு வருடமாக THE RITZ - CARLTON GRAND Cayman நிறுவனத்தில் பணி புரிந்து வரும் சுலைமான் நாபிஃ அவர்கள் கடந்த காலங்களில் இத்துறை சார் பல அடைவுகளையும் ,சான்றிதல்களையும் பெற்றுக்கொன்ட இவர் இறுதியாக இடம்பெற்ற விருது வழங்கும் விழாவில் ( FIVE STAR ) எனும் உயர்விருது வழங்கி கெளரவிக்கப்பட்டதோடு
19/12/2024 அன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் சுலைமான் நாபிஃ அவர்கள் 2024 ஆம் ஆண்டிற்க்கான ( FIVE STAR ) விருதிற்க்கும் பரிந்துறைக்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.
ஹோட்டல் துறையில் ( Hospitality Management ) அதிக ஆர்வம் கொன்ட இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு முதன்முறையாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலான Jumeirah at Etihad Towers நிறுவனத்தில் முதன்முறையாக தனது தொழில் துறையினை ஆரம்பித்த இவர் 2018 ஆம் ஆண்டு வரை ஆறு ஆண்டுகள் அங்கு பனி புரிந்து பல சான்றிதல்களை பெற்றுக்கொன்டமையும் குறிப்பிடத்தக்கது.
தனது ஆரம்ப கல்வியினை நிந்தவூர் கமு/ இமாம் கஸ்ஸாலி மகா வித்தியாலயத்திலும் பின்னர் நிந்தவூர் கமு/ அல் அஷ்ரக் தேசிய பாடசாலையில் சாதாரன தரம் வரை கற்று ஹோட்டல் துறை கற்க்கை நெறியில் இணைந்து கொண்ட இவர் இவ்விரு பாடசாலையின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்தாகும்.
கொரோனா தொற்று ஏற்ப்பட்ட காலப்பகுதிகளில் பல அமைப்புகளுடனும், தன்னார்வு நிறுவனங்களுடனும் இணைந்து தன்னை அர்ப்பணித்து பல சமூக சேவைகளை செய்த சமூக சேவையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும் .
தனது நிந்தவூர் மன்னுக்கு மேலும் பெருமை சேர்த்த சுலைமான் நாபிஃ அவர்கள் இன்னும் பல விருதுகளையும், அடைவுகளையும் பெற்று தனது துறையில் உயர்ந்து செல்ல சிடிசன் மீடியா சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
@CM