Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

மூத்த சகோதரனால் நசுக்கப்பட்டு ஆறு மாத குழந்தை உயிரிழப்பு!

Top Post Ad


களுத்துறை பகுதியில் குழந்தை ஒன்று தனது மூத்த சகோதரனால் நசுக்கப்பட்டதால் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


ஆறு மாதங்களேயான குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


குறித்த குழந்தை தனது மூத்த சகோதரனுடன் உறங்கிக்கொண்டிருக்கும் போது அவரது உடலால் நசுக்கப்பட்டதன் காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


பின்னர் குழந்தை களுத்துறையில் உள்ள நாகொட குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதித்த வேளையில் குழந்தை உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


@CM

Tags

ads