எதிர்வரும் மே மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள South Asian Championship இற்கான இலங்கையை பிரதிநுவப்படுத்தும் தேசிய மட்ட வீரர்களை ( National Pool Player) தெரிவு செய்வதற்கான இரண்டாம் கட்ட தெரிவிற்கான தேசிய மட்ட தெரிவு போட்டிகள் ( National Level Selection) இன்று தியகம மகிந்த ராஜபக்ச மைதானத்தில் இடம்பெற்றது.
இதில் இலங்கை இராணுவத்தை பிரதிநுவப்படுத்தி கலந்து கொன்ட எமது நிந்தவூர் மண்ணின் தங்க மகனும் Lagan விளையாட்டுக் கழக வீரருமாகிய MIM.AZAN அவர்கள் நீளம் பாய்தல் ( Long Jump) போட்டியில் 7.45 M பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தை பெற்று தேசிய குழாமிற்கு National pool க்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
எதிர்வரும் May மாதம் நடைபெறவுள்ள South Asian Championship போட்டிகளில் கலந்து கொண்டு இவர் தெரிவு செய்யப்படுவாராயின் அது அவரின் முதலாவது சர்வதேச போட்டியாக அமையும்.
எனவே சிடிசன் மீடியா சார்பாக இவர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று வாழ்த்தி பிரார்த்திக்கின்றோம்.
@CM