கடந்த ஏப்ரல் மாதம் 7 ம் திகதி 2025 அன்று இந்தியா நேரப்படி சரியாக காலை 11:00 மணி அளவில் உலகில் உள்ள வெவ்வேறு நாடுகளிளும் அதிலும் உள்ள வெவ்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஒரே நேரத்தில் 200+ மேற்பட்ட உளவியல் பயிற்றுவிப்பாளர்கல் Global Happiness Synchrony (GHS) என்ற தலைப்பில், இந்தியாவைச் சேர்ந்த உளவியல் பயிற்சியாளர் Dr Hussain Basha அவர்களின் வழிகாட்டுதலில் பயிற்சி அளித்து சாதனை படைத்துள்ளனர்.
இந்த பயிற்சியானது பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், இளைஞர்கள், முதியவர்கள், ஆசிரியர்கள், தொழில் நிபுணர்கள், ஆலிம்க்கள் இது போன்று இன்னும் பல ஆயிரம்கணக்கான மக்களுக்கு பயிற்ச்சி அளிக்கப்பட்டு Grand Universe Book of records புத்தகத்தில் இந்த பயிற்சியாளர்கள் இடம் பிடித்து உலக சாதனை படைத்துள்ளனர்.
அந்த வகையில் இலங்கை திருநாட்டில் நிந்தவூரை சேர்ந்த உளவியலாளர் அஹ்ஸன் இன்ஆமி இந்த நிகழ்வை நிந்தவூர் அறபா பாடசாலையில் அதிபர் ஹிதாயதுல்லாஹ் சேர் இன் தலைமையில் தரம் 11 மாணவர்களுக்கு நடாத்தி, உலக சாதனையாக Universe Book of records இல் தனது நாமத்தை பதித்து எம் ஊரிற்க்கு பெருமை சேர்த்து தந்துள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.
அவருக்கு சிடிசன் மீடியா சார்பாகவும் எம்முடைய ஊர் சார்பாகவும் இவருடைய பணி சிறப்புற்று முன்னேற வாழ்த்துகிறோம் .
@CM