Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

நுவரெலியா பிரதான வீதிகளில் கடும் பனிமூட்டம்; வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை!


நுவரெலியாவை நோக்கி செல்லும் பல பிரதான வீதிகளில் பனிமூட்டமான நிலை காணப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


ஹட்டன் -நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா தொடக்கம் நுவரெலியா வரையிலும், நுவரெலியா -பதுளை பிரதான வீதியில் நுவரெலியா முதல் ஹக்கல வரையிலும், நுவரெலியா -கம்பளை பிரதான வீதியில் நுவரெலியாவிலிருந்து பம்பரக்கலை வரையிலும் இந்த பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்த பனிமூட்டமான நிலையின் போது வீதிகளில் வாகனம் சாரதிகள் அவதானமாக வாகனத்தை செலுத்துமாறு நுவரெலியா காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.


@CM

Tags

ads