இளம் பருவத்தினர் கையடக்க தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என புதிய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களிடையே கையடக்க தொலைபேசி பயன்பாடு தற்கொலை எண்ணங்கள், மோசமான உணர்ச்சி கட்டுப்பாடு, குறைந்த சுயமரியாதை மற்றும் யதார்த்தத்திலிருந்து விலகுதல் ஆகியவற்றுடன் தொடர்புடையது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மனித மேம்பாடு மற்றும் திறன்கள் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, பெண்கள் இந்த வகையான மனநலப் பிரச்சினைகளை அனுபவிக்கும் வாய்ப்பு அதிகம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கையடக்க தொலைபேசிக்கு ஆளாவது அவர்களின் மன ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே சிறுவர்களுக்குக் கையடக்க தொலைபேசிகளை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.
@CM