நாட்டில் பெண்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, ஆண்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படுவதாக வயம்ப பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அமிந்த மெத்சில தெரிவித்துள்ளார்.
1995 ஆம் ஆண்டு நாட்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, 100 பெண்களுக்கு 100.2 விகித ஆண்கள் காணப்பட்டதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், தற்போது 100 பெண்களுக்கு 93.7 விகித ஆண்களே காணப்படுவதாக வயம்ப பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அமிந்த மெத்சில குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், உலக மக்கள்தொகையில் 50.27% ஆண்களும், 49.73% பெண்களும் காணப்படுகின்றனர்.
இதுபோன்ற சூழலில், நாட்டிலுள்ள ஆண்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, சமூகப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் எனவும் வயம்ப பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் அமிந்த மெத்சில பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
@CM