Banner
Type Here to Get Search Results !
Developed by Cleverbit

விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி வரும் ஆபத்து!


விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி வரும் ஆபத்து – அமெரிக்க விண்வெளிப் படை தீவிர கண்காணிப்பு!


அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா (NASA) விண்வெளியில் செலுத்திய பிரமாண்ட தொலைநோக்கி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி வேகமாக வருவது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த 2004-ஆம் ஆண்டு விண்வெளியில் ஏற்படும் வெடிப்புகள் மற்றும் சூப்பர்நோவா குறித்து ஆய்வு செய்வதற்காக 'ஸ்விப்ட்' (Swift) என்ற அதிநவீன விண்வெளி தொலைநோக்கியை நாசா விண்ணில் செலுத்தியது.


கடந்த 22 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இந்த தொலைநோக்கி, தீவிர சூரிய செயல்பாடுகள் காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்து பூமியின் வளிமண்டலத்தை நோக்கி வேகமாக இறங்கத் தொடங்கியுள்ளது. இதைக் காப்பாற்றும் முயற்சி தோல்வியடைந்ததால், இதன் செயல்பாடுகள் முழுமையாக நிறுத்தப்பட்டன.


சுமார் 1.5 டன் எடையுள்ள இந்தத் தொலைநோக்கி பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும்போது பெரும்பாலான பகுதிகள் எரிந்து சாம்பலாகிவிடும். இருப்பினும், அடர்த்தியான உலோகப் பகுதிகள் மற்றும் உடைந்த பாகங்கள் பூமியில் விழ வாய்ப்புள்ளன.


இவைகளின் எச்சங்கள் கடலில் விழக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டாலும், இந்தியா, ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய-தெற்கு அமெரிக்கா ஆகிய பகுதிகளில் இதன் அச்சுறுத்தல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதனால் அமெரிக்க விண்வெளிப் படை இதன் பயணப் பாதையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.


@CM

Tags

ads