Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூர் முதல் பெண் CMA; ஜெ.ஜுமானியா பட்டமளிப்பில் கௌரவிக்கப்பட்டார்!


நிந்தவூர் -04 ஆம் பிரிவைச் சேர்ந்த ஜெ. ஜுமானியா, Certified Management Accountants (CMA) பட்டத்தைப் பெற்று நிந்தவூரின் முதல் பெண் சான்றுப்படுத்தப்பட்ட முகாமைத்துவ கணக்காளரானார்.


கடந்த 18.12.2025 அன்று பாண்டார நாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) இடம்பெற்ற CMA நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் இவருக்குப் பட்டமும் சான்றிதழும் வழங்கப்பட்டன. பரீட்சையில் காட்டிய சிறந்த திறமைக்காக இவர் பணப்பரிசுடன் சிறப்பிக்கப்பட்டார்.


இவர் ஏற்கனவே, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவ பீடத்தின் கீழ், BBA (கணக்கியல் சிறப்பு) பட்டப்படிப்பை முதலாம் வகுப்பில் முடித்துள்ளார்.


ஜெ. ஜுமானியா இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவப் பீடத்தின் ஓய்வுபெற்ற சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜமால்தீன் மற்றும் சபீக்கா ஜமால்தீன் ஆகியோரின் இரண்டாவது மகளும், பொறியாளர் றுஸைத்தின் மனைவியுமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஜெ.ஜூமானியா அவர்களுக்கு சிடிசன் மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.


@CM

Tags

ads