Type Here to Get Search Results !
Developed by Cleverbit

சிறைச்சாலைகளுக்கு இடையிலான மல்யுத்த போட்டியில் மட்டக்களப்பு வீரர்களுக்கு 9 தங்கப் பதக்கம்

 எஸ் ஜே புஹாது

அகில இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களங்களுக்கிடையிலான மல்யுத்த சுற்றுப் போட்டியில் ஒன்பது தங்கப் பதக்கங்களை மட்டக்களப்பு வீரர்கள் சுபிகரித்தனர்

அகில இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களங்களுக்கிடையிலான
2023 ஆம் ஆண்டிற்குரிய மல்யுத்த சுற்றுப் போட்டியானது இம்முறை பொலன்னறுவை றோயல் கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் கோலாகலமான முறையில் நடைபெற்றது.

இதற்கு பிரதம அதிதிகளாக சிறைச்சாலைகள் திணைக்கள கொமிசனர் கொடித்துவக்கு அவர்களும் பொலன்னறுவை சிறைச்சாலை அதிகாரி அவர்களும் மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரி அவர்களும் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்.

இப்போட்டியானது எடைப்பிரிவுகளுக்கு ஏற்ப நடைபெற்று மிகவும் விறுவிறுப்பாக நடந்து இறுதிக்கட்டத்தை அடைந்த தருணத்தில் மட்டக்களப்பு சிறைச்சாலை திணைக்களம் ஒன்பது தங்கப் பதக்கங்கள் மற்றும் பல பதக்கங்களை வென்று அகில இலங்கையில் முதலாவது அணியாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

இரண்டாவது அணியாக யாழ்ப்பாணம் சிறைச்சாலை தெரிவாகியது .
போட்டியின் சிறந்த வளர்ந்துவரும் வீரராக மட்டக்களப்பு சிறைச்சாலை உத்தியோகத்தர் குமாரசிறி அவர்கள் தெரிவானார்.

ads