பேருந்துப் பயணங்களுக்கான இலத்திரனியல் அட்டை கட்டண முறையை அறிமுகப்படுத்தும் திட்டம் நாளை (24) உத்தியோகப்பூர்வமாகத் தொடங்கப்படவுள்ளது.
கொட்டாவை பகுதியிலுள்ள மாகும்புர பல்வகை போக்குவரத்து மையத்தில் இந்தத் திட்டம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் இந்த ஆரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இந்த புதிய முயற்சியை, டிஜிட்டல் அமைச்சும் போக்குவரத்து அமைச்சும் இணைந்து நடைமுறைப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
@CM
