Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

55000/-பணம் மற்றும் ஒரு மின்விசிறி நிந்தவூர் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரிடம் ஒப்படைக்கப்பட்டது.

நாட்டின் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட முக்கிய துறைகளில் மருத்துவ துறையும் ஒன்று. எனவே நித்தவூர் ஆதார வைத்தியசாலையின் அத்தியவசிய மருந்துத் தேவையை பூர்த்தி செய்யும் முகமாக, Lucky HR Pvt (Ltd) இன் நிறைவேற்று தலைவர் Lion Nusky (50,000ரூபா பணம்) மற்றும் BBB நிந்தவூரின் உரிமையாளர் Lion Mufeeth (5000/- பணம்+ 25,000 பெறுமதியான மின்விசிறி)ஆகியோரின் அனுசரணையுடன் நிந்தவூர் சுப்ரீம் லயன்ஸ் கழகத்தினால் நன்கொடையாக நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது.


இந்நிகழ்வு நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் 08.04.2023 அன்று லயன்ஸ் மாவட்ட 306 C2 ஆளுநர் லயன்.பெனட் கம்லத் அவர்களின் தலைமையில் 306 C2 லயன்ஸ் மாவட்டத்திற்கான அவைச்செயலாளர் லயன் கயா உபசேன, மாவட்ட GMT ஒருங்கிணைப்பாளர் லயன் சாஹிர் அஹமட், வலயத் தலைவர் லயன்.எம்.டி.எம்.அனாப், சம்மாந்த்துறை கோல்டன் சிட்டி லயன்ஸ் கழக உறுப்பினர்கள் மற்றும் நிந்தவூர் சுப்ரீம் லயன்ஸ் கழகத்தின் உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.


 லயன் நுஸ்கி மற்றும் லயன் முபீத் ஆகியோர் இந்த திட்டத்தின் திட்டத் தலைவர்களாக செயற்பட்டிருந்தனர்.

Tags

ads