Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூர் காஷிபி உலமாக்கள் சுற்றுத் தொடரில் அட்டாளைச்சேனை அஸ்திகா உலமா அணி சம்பியன்

நிந்தவூர் மண்ணில் முதன் முதலாக கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊர்களை சார்ந்த உலமாக்கள் மற்றும் ஹாபிழ்கள் கிரிக்கெட் அணிகள் பங்கு கொள்ளும் மாபெரும் கிரிக்கெட் சுற்றுச்தொடர், 


 நிந்தவூர் காஷிபி விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் 13.05.2023 சனிக்கிழமை நிந்தவூர் பொது விளையாட்டு மைதானம் மற்றும் வௌவாலோடை மினா விளையாட்டு மைதானம் ஆகிய இரண்டு மைதானங்களில் லீக் சுற்றுப் போட்டியாக ஒரே நேரத்தில் இடம் பெற்றது.


  இறுதி ஆட்டத்தில் பாலமுனை மஹாஸினி உலமா அணி, அட்டாளைச்சேனை அஸ்திகா அணி என்பன மோதியதுடன்,


 Champion ஆக அட்டாளைச்சேனை அஸ்திகா அணியும், Runner's up ஆக பாலமுனை மஹாஸினி வெற்றிவாகை சூடின.


உலமா கிரிக்கெட் வரலாற்றில் முதன்முதலாக அட்டாளச்சேனை அஸ்திகா உலமா அணி சம்பியனானமை குறிப்பிடத்தக்கதாகும்.


பிரதமர் அதிதியாக திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்கள் கலந்துகொண்டு அணிகளுக்கான வெற்றிக் கேடயங்களை வழங்கி வைத்தார்.


நிந்தவூர், அட்டாளைச் சேனை, அக்கரைப்பற்று, ஒலுவில், பாலமுனை, பொத்துவில், சம்மாந்துறை, கல்முனை, ஆகிய ஊர்களைச் சேர்ந்த உலமா கிரிக்கெட் அணிகள் பங்கு கொண்டன.


உலமாக்கள் எல்லாத் துறைகளிலும் பிரகாசிக்க வேண்டும் என்கின்ற அடிப்படையில் இச்சுற்றுத் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன்,


 முழுமையாக உலமாக்கள் மாத்திரம் பங்கு கொள்ளும் சுற்று தொடராக நிந்தவூர் மண்ணில் முதன்முதலாக இடம் பெற்றது.


இன் நிகழ்வுக்கு ஊடக அணுசரணை கிழக்கின் முதல்வன் சிடிசன் மீடியா

Tags

ads