Type Here to Get Search Results !
Developed by Cleverbit

பால் மாவுக்கான சுங்க வரி திருத்தம் அமுல்ப்படுத்தபட்டுள்ளது.



இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரியை திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 01 கிலோ கிராம் பால் மாவிற்கு 100 ரூபா வரி அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வரி திருத்தம் நேற்று (12) முதல் அமுலுக்கு வந்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால் மாவுக்கு 20 வீதம் அல்லது 225 ரூபா சுங்க இறக்குமதி வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த காலங்களில் அதனை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எவ்வாறாயினும், நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால் மாவுக்கு நிதியமைச்சு 100 ரூபா வரி விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வரித் திருத்தம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், வரி அதிகரிக்கப்பட்டாலும் பால் மாவின் விலையில் மாற்றம் செய்ய எதிர்பார்க்கவில்லை என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.


Tags

ads