Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூர் அட்டப்பள்ள பிரதேசத்தில் பல மாதங்களாக கேரள கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த சந்தேக நபர் கைது!

 


கடந்த (14.08.2023) ஆம் திகதி இரவு நேரத்தில் கேரள கஞ்சாவை பொதி செய்து கொண்டு இருந்த நிலையில் நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.என்.எம்.நஜீப் அவர்களின் வழிகாட்டலின் பேரில்.


சுற்றிவளைப்பு 


 போதை ஒழிப்பு மற்றும் பெருங் குற்றப்பிரிவு பொறுப்பு அதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.எல்.எம்.முஸ்தபா மற்றும் பொலிஸ் சாஜன் ஆரியரத்ன பொலிஸ் அதிகாரி மோகனியலால்,திசாநாயக்க,தர்மராஜா ஆகியோரினால் சுற்று வளைப்பை மேற்கொண்டு.


 22வயதுடன் கூடிய சந்தேக நபரையும் பொதி செய்யப்பட்ட கேர்ல கஞ்சாவையும் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதுடன்.


குறித்த சந்தேக நபரை எதிர் வரும் (29.08.2023) ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags

ads