Type Here to Get Search Results !
Developed by Cleverbit

தேசிய மட்டப் போட்டிகளில் தொடர்ந்து சாதிக்கும் நிந்தவூர் அல்- மதீனா மகா வித்தியாலயம்...


கல்வி அமைச்சினால் அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கு இடையில் நடாத்தப்பட்ட தேசிய மட்ட கபடி போட்டிகள் கடந்த 23,24,25ம் திகதிகளில் கேகாலையில் இடம்பெற்றது.



இதில் கிழக்கு மாகாணம் சார்பாக பங்கு பற்றிய நிந்தவூர் அல் மதீனா மகா வித்தியாலய 17 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் கபடி அணியினர் இரண்டாம் இடத்தை பெற்று வெள்ளி பதக்கத்தை பெற்றுள்ளனர்.



இவ் அணி கடந்த வருடம் சம்பியனாக தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.



இவ் அணியை பயிற்றுவித்த கழகத்தின் செயலாளரும் ஆசிரியருமான Mohamed Ismath அவர்களுக்கும் பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர் தேசிய கபடி அணி தலைவர் Aslam Saja அவர்களுக்கும் பாடசாலை பொறுப்பாசிரியர்களுக்கும் பாடசாலை நிர்வாகத்துக்கும் கழகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு.


Citizen Media சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Tags

ads