Type Here to Get Search Results !
Developed by Cleverbit

சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள கட்டாக்காலி நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு.

 


சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்

சம்மாந்துறை வைத்தியசாலை வளாகத்தில் அதிகரித்துச் செல்லும் கட்டாக்காலி நாய்களை அகற்றுவதற்கு 2023.07.12ஆம் திகதி நடைபெற்ற சம்மாந்துறை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய சம்மாந்துறை பிரதேசத்தில் திரியும் கட்டாக்காலி நாய்களை வாகனம் மூலம் ஏற்றி சென்று வீரமுனை கிளினிக் சென்டர் வளாகத்தில் நாய்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு சத்திர சிகிச்சை கடந்த வியாழக்கிழமை(19) மேற்கொள்ளப்பட்டன.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை சம்மாந்துறை பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Tags

ads