Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தியது இந்திய அணி!


இவ் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதியிருந்தது.


இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.


அதற்கமைய, இந்த அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 199 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.


அணிசார்பில் அதிகபடியாக, ஸ்டீவ் ஸ்மித் 46 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.


துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய அவுஸ்திரேலிய அணியின் ஏனைய வீரர்கள் 30க்கும் குறைந்தஓட்டங்களையே பெற்றுக்கொடுத்தனர்.


பந்துவீச்சில், இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா 28 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.


இந்தநிலையில், 200 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய இந்திய அணி 41.2 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.


இந்திய அணிசார்பில் அதிகபடியாக, கே.எல்.ராகுல் ஆட்டமிழக்காது 97 ஓட்டங்களையும் விராட் கோலி 85 ஓட்டங்களையும்,  பெற்றுக்கொடுத்தனர்.


பந்துவீச்சில், அவுஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹேசில்வுட் 38 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Tags

ads