Type Here to Get Search Results !
Developed by Cleverbit

பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்களினால் கடலரிப்பைத் தடுக்கும் நிரந்தர வேலைத்திட்டம் !


மாளிகைக்காடு பிரதேசத்தின் கடலரிப்பைத் தடுக்கும் நிரந்தர வேலைத்திட்டம் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்களின் முயற்சியால் மாளிகைக்காடு பிரதேசத்தின் கடலரிப்பை தடுப்பதற்கான கரைக்கு குறுக்கால் கல் வீதியமைக்கும் நிரந்தரத் தீர்வுத்திட்டம் நேற்று (08) ஆரம்பித்து வைக்கப்பட்டது. 


பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் சேதமடைந்த பாதைகளைப் பார்வையிட்டதுடன் வேலைத் திட்டத்தையும் ஆரம்பித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆப் பள்ளிவாசல் பேஷ் இமாம் அஷ்சேக் மின்ஹாஜ் அவர்களினால் விஷேட  துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.


இதனைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாளிகைக்காடு கிழக்கு வட்டார அமைப்பாளர் MH நாஸர் அவர்களின் தலைமையில் மாளிகைக்காடு மீனவ மற்றும் பொது  அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது. இங்கு பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் அவர்கள் உரையாற்றுகையில்; நான் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும்  இத்திட்டம் மிக விரைவில்  இடம்பெற காரணமாக இருந்த ஜனாதிபதி அவர்களுக்கு விஷேட நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இம்மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கா வண்ணம் இவ்வேலைத் திட்டத்தை விரைவில் முடித்துக் கொடுக்குமாறு சம்மந்தப்பட்ட பொறியியலாளரை வேண்டிக் கொண்டார்.


இந்நிகழ்வில் உரையாற்றிய காரைதீவு பிரதேச செயலாளர் ஜெ. ஜெகராஜன் மற்றும்  கரையோரப் பாதுகாப்பு பேனல் தினைக்களத்தின் கிழக்கு பிராந்திய பொறியியலாளர் எம்.துளசிதாஸன் ஆகியோர் இத்திட்டம் விரைவாக நடத்த உதவிய பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்கள்.


இந்நிகழ்வில் மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆப் பள்ளிவாசல் செயலாளர் ரஊபி, மாளிகைக்காடு மீன் மொத்த வியாபார சங்கத்தின் தலைவர் நெளஷாத், செயலாளர் பைசர் மற்றும்  உறுப்பினர்கள், ஜனாஸா நலன்புரி அமைப்பின் தலைவர் அனுவர் மற்றும் உறுப்பினர்கள், உலமாக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


ஊடகப்பிரிவு.

Tags

ads