Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூரில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ( 03.11.2023) ஜும்ஆத் தொழுகைக்கு பின்னர் பலஸ்தீன மக்களுக்காக பிரார்த்தனையும், கண்டனப் பேருரையும் ஊர் மக்கள் சார்பாக நடத்துவது சம்பந்தமான தீர்மானம்

 


இன்று ஜும்ஆப் பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை மற்றும் நிந்தவூர் ஜம்இய்யத்துல் உலமா சபையின்  நிறைவேற்று குழு உறுப்பினர்களுக்கு இடையிலான இடம்பெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம்,

 ✅ இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (03.11.2023) அனைத்து ஜும்ஆப்  பள்ளிவாயில்களிலும் " *பாலஸ்தீனம் புனித பூமி"* என்னும் தலைப்பில் குத்பா பிரசங்கங்களை நிகழ்த்துவது எனவும்,

✅ ஜும்ஆ முடிந்ததன் பிறகு ஜும்ஆப் பள்ளிவாயல் முற்றத்தில் பாலஸ்தீன்,  காஸா மக்களுக்காக கண்டன பேருரையும், துஆப் பிரார்த்தனையும் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

✅ இதற்கான சுலோகங்களை தயாரிக்கும் பொறுப்பு ஜம்இய்யாவினால்,

 கண்டன  பேருரை நிந்தவூர் ஜம்இய்யத்துல் உலமா  தலைவர் அவர்களும்,  ஜூம்ஆப் பள்ளிவாயல் நிர்வாக சபை சார்பாக தலைவர் அவர்களாலும் உரை நிகழ்த்தப்படும்.

✅ நிகழ்வு எவ்விதமான பெரும் கோஷங்களும், ஊர்வலமும் இல்லாமல்,

 நாட்டின் வெளியுறவுக் கொள்கையோடு ஒத்துப்போகும் விதத்தில் ,

 இதனை சிறப்பாக செய்து அமைதியாக கலைவதெ தீர்மானிக்கப்பட்டுள்ளது.

✅ மேலும் அனைத்து ஜும்ஆப் பள்ளிவாசலிலும் ஜும்ஆ முடிந்ததன் கலந்து கொள்ளச் செய்யுமாறு பள்ளிவாயல்களுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுப்பதனமும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்நிகழ்வுக்கு நாம் அனைவரும் கலந்து கொண்டு எமது உணர்வுகளை வெளிப்படுத்த அல்லாஹ் துணை புரிவானாக.

செயலாளர்அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாநிந்தவூர் கிளை

ads