Type Here to Get Search Results !
Developed by Cleverbit

முதியோர்கள் தங்கள் வீடுகளில் வசிக்க குறைந்தபட்ச வசதிகள் மற்றும் சுகாதார பொருட்களை வழங்குதல் - 2023.



முதியயோர்களுக்கான தேசிய செயலகத்தினால் மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சித்திட்டத்தில் நிந்தவூர் பிரதேச செயலகத்தில் தெரிவு செய்யப்பட்ட 17 பயனாளிகளுக்கு மொத்தமாக ரூபா 500,000.00 பெறுமதியான கட்டில்கள், மெத்தைகள், மற்றும் கொமட், நீர் மெத்தை 2023.11.06 ம் திகதி பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM. அப்துல் லத்தீப் அவர்களின் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது. 


முதியோர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் AB. நிஷ்பான் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், சமூக சேவை உத்தியோகத்தர், நிதி உதவியாளர் மற்றும் சமூக சேவை பிரிவின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



Tags

ads