Type Here to Get Search Results !
Developed by Cleverbit

களனிப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பிரிவுகளும் கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

 


இதனையடுத்து, மருத்துவ பீட விடுதிகள் தவிர்ந்த பல்கலைக்கழகத்தின் அனைத்து விடுதிகளும் மூடப்பட்டிருக்கும் அதேவேளை, அனைத்து மாணவர்களும் நாளை (5) காலை 8 மணிக்கு முன்னர் விடுதிகளை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


பல்கலைக்கழகப் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் நேற்றிரவு உறங்கிக் கொண்டிருந்த போது கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டார் எனக் கூறப்படுகின்றது.


இதனையடுத்து, மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் இடையே நிலவிய அமைதியற்ற சூழ்நிலையால், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Tags

ads