Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூர் பொலிஸாரின் திடீர் சுற்றி வளைப்பில் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது!


 நிந்தவூர் பொலிஸாரின் திடீர் சுற்றி வளைப்பில் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது! 


நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம்.நஜீம் அவர்களின் தலைமையில் நேற்று (2024.14.01)இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது பெருமளவிலான (கஞ்சா) விதைகளுடன் போதைப் பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


அண்மை காலமாக போதைப் பொருள் விற்பனையை தடுக்க அதிரடி காட்டும் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம்.நஜீம் மற்றும் அவரது அதிகாரிகள் பாரியதொரு சமூக பணியினை புரிந்துவரும் நிலையில் தற்போது நிந்தவூரில் போதை பொருள் விற்பனை மற்றும் பாவனை என்பன கனிசமாக குறைந்துள்ளமையை வரவேற்கத்தக்க செயலாகவே நோக்க வேண்டியுள்ளது.

ads