Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூரைச் சேர்ந்த எம். ஐ. உமர் அலி அவர்கள் சட்டத்தரணிகளுக்கான இறுதிப் பரீட்சையில் சித்தி பெற்றுள்ளார்.


 நிந்தவூரைச் சேர்ந்த எம். ஐ. உமர் அலி அவர்கள் சட்டத்தரணிகளுக்கான இறுதிப் பரீட்சையில் சித்தி பெற்றுள்ளார்.


   - ஏ. ஷபாஅத் அஹமட் -

இன்று மாலை இலங்கை சட்டக்கல்லூரி வெளியிட்டுள்ள சட்டத்தரணிகளுக்கான இறுதிப் பரீட்சை முடிவுகளின் பிரகாரம்

நிந்தவூரைச் சேர்ந்தவரும், கவிஞரும், சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தருமான எம். ஐ. உமர் அலி அவர்கள் சித்தி பெற்றுள்ளார்.


கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் நிந்தவூரைச் சேர்ந்த ஏனைய நான்கு பேருடன் சட்ட இளவலாக (L LB) இலங்கையின் திறந்த பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின்போது சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை அறிந்ததே.


விரைவில் உமர் அலி அவர்கள் உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


நிந்தவூரின் மற்றுமொரு சட்டத்தரணி எம். ஐ. உமர் அலி அவர்களுக்கு (சிடிசன் மீடியா) சார்பாக வாழ்த்துகிறோம்.

ads