Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நடுவானில் கழன்று விழுந்த விமான கதவு! பதற்றத்துடன் பயணித்த மக்கள்!

 சுமார் 180 பேர்களுடன் அமெரிக்காவின் போர்ட்லாண்ட் என்ற இடத்தில் இருந்து கலிபோர்னியாவின் ஒன்டரியோ நகரை நோக்கி பறந்த #Alaska airlines போயிங் 737-9 MAX விமானம் சுமார் 16,325 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த போது திடீரெனஅதன் கதவு காற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளது.







அப்போது வெளி காட்சிகள் நேரடியாக உள்ளே தெரிந்தது மட்டுமின்றி மிக வேகமாக காற்று உள்ளே நுழைந்தது.


இதனால் பயணிகள் அனைவரும் செய்வதறியாது அதிர்ச்சியில் உறைந்து மூச்சு பேச்சின்றி காணப்பட்டனர்.


எனினும் ஒரு சிலர் மிக தைரியமாக அதை கமெராவில் பதிவு செய்தனர்


இந்நிலையில் உடனடியாக விமானம் போர்ட்லாண்ட் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. 


இந்த விமானம் கடந்த ஆண்டு ஒக்டோபர் 2023 அன்று போயிங்கில் இருந்து புதிதாக அலாஸ்கா எயார்லைன்ஸ்ஸிற்கு வழங்கப்பட்டது . 


இது 11 நவம்பர் 2023 அன்று வணிகச் சேவையில் நுழைந்தது.


06.01.2024


ads