Type Here to Get Search Results !
Developed by Cleverbit

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் முஸர்ரப் அவர்கள் நிந்தவூறுக்கு திடீர் விஜயம்!


 கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் முஸர்ரப் அவர்கள் நிந்தவூறுக்கு திடீர் விஜயம்!


(எஸ்.எம்.அறூஸ்)


அண்மையில் வெளியான ஆசிரியர் இடமாற்ற பட்டியலில் உள்ள அம்பாரை மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ள ஆசிரியர்கள் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முசாரப் அவர்களைச் சந்தித்து தமது இடமாற்றங்களை இரத்துச் செய்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.


இவர்களின் கோரிக்கைகளை செவிமடுத்த பாராளுமன்ற உறுப்பினர் முசாரப் அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடி நல்லதொரு முடிவினை பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்தார்.



இதன்போது, பாராளுமன்ற உறுப்பினரின் மாவட்ட இணைப்பாளர் வை.எல்.நியாஸ்,நிந்தவுர் இணைப்பாளர் றபீக் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.


ads