Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

வணிக மேலாண்மைத் துறையில் முதுமானிப் பட்டம் பெற்றார் நிந்தவூர் முகம்மட் இக்ராம்.


 வணிக மேலாண்மைத் துறையில் முதுமானிப் பட்டம் பெற்றார் நிந்தவூர் முகம்மட் இக்ராம்.

   (தகவல் - ஏ. ஷபாஅத் அஹமட் )


நிந்தவூர் 03ம் பிரிவு, மூன்றாம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த முகம்மட் ஷாக்கீர் முகம்மட் இக்ராம் இங்கிலாந்தின் West of England பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மைத் துறை கற்கையில் முதுமானிப் பட்டத்தினைப் பெற்றுக்கொண்டார்.


நேற்றைய தினம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு வைபவத்தின்போது முதுமானிப் பட்டத்தை பெற்றார்.


நிந்தவூர் இமாம் றூமி வித்தியாலயம், அல் அஷ்றக் தேசிய பாடசாலை போன்றவற்றில் பயின்ற முகம்மட் இக்ராம் தனது உயர் கல்வியை பதுளை முஸ்லிம் மத்திய கல்லூரியில் உயிரியல் விஞ்ஞானத்துறையைத் தேர்ந்து கொண்டார்.


இவர் உயர் கல்வித் துறையில் எல்லோரையும் போலல்லாது நமது பிராந்தியத்தில் பரிச்சியமற்ற ஆடைத் தொழில் துறையை தேர்ந்து ரத்மலான Brandix Corporate Cmpusல் ஆடைத் தொழினுட்ப த்தில் டிப்ளோமா கற்கையினை (Diploma in Clothing Technology) பூர்த்தி செய்தார்.


இத்துறையில் தனக்கு இருந்த ஆர்வமேலீட்டினால் Royal Melbourne Institute of Technology பல்கலைக்கழகத்தில் ஆடைத் தொழினுட்பம் மற்றும் முகாமைத்துவத்தில் இளங்கலைப் பட்டத்தினையும் (Bachelor of Science in Technology and Management) பெற்றுக்கொண்டார்.


இதன்மூலம் நிந்தவூர் வரலாற்றில் ஆடைத் தொழினுட்பம் மற்றும் முகாமைத்துவத் துறையில் முதல் பொறியியலாளர் என்னும் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.


இளவல் முகம்மட் இக்ராம் ஆடை உற்பத்தித் துறையில் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற நிறுவனங்களான மாஸ் Holding மற்றும் Next Sourcing போன்ற முன்னணி நிறுவனங்களில் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


எல்லோரும் தேர்வுசெய்யும் உயர் கற்கைகளை விடுத்து புதிய துறையில் தடம் பதிக்க வேண்டுமென்று தீர்மானித்தமையானது இளைய சமுதாயத்திற்கு இவர் சொல்லும் புதிய செய்தியாகும் எனத் தோன்றுகிறது.


இவர் முகம்மட் இக்ராம் முகம்மது ஷாக்கிர்-அப்துல் மஜீத் நூர்ஜஹான் தம்பதிகளின் புதல்வராவார்.


புதிய துறையைத் தேர்ந்துள்ள முகம்மட் இக்ராம் அவர்களுக்கு எமது சிட்டிசன் ஊடக வலையமைப்பு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்..

ads