Type Here to Get Search Results !
Developed by Cleverbit

இலங்கை ஓட்டுநர் உரிமங்கள்! மோட்டார் போக்குவரத்துத் துறையின் முக்கிய அறிவிப்பு!


 

தற்போது தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தை கொண்டுள்ள வாகன சாரதிகளுக்கு இந்த வருடம் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதம் முதல் நிரந்தர சாரதி அனுமதி அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.


பொருளாதார நெருக்கடியின் விளைவாக உரிம அட்டைகளை இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக நிரந்தர சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளை வழங்க முடியாதுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.


இதன் விளைவாக 800,000 க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு நிரந்தர உரிம அட்டைகளுக்கு பதிலாக தற்காலிக உரிமங்களை திணைக்களம் வழங்கியதாக அவர் மேலும் கூறினார்.


தேவையான அட்டைகள் இறக்குமதி செய்யப்பட்ட போதிலும், பொதுவாக வருடத்திற்கு 900,000 முதல் 1 மில்லியன் ஓட்டுநர் உரிமங்கள் புதிய சாரதி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் புதுப்பித்தல்களாக அச்சிடப்பட வேண்டும், என்றார்.


எவ்வாறாயினும், அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், சாரதி அனுமதிப்பத்திரங்கள் குவிந்து கிடப்பதோடு, வழங்கப்படாமலும் உள்ளதாக நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்தார்.


மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

ads