Type Here to Get Search Results !
Developed by Cleverbit

30 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது!


30 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப் பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.


அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவின் தகவலுக்கமைய நீண்ட நாட்களாக ஐஸ் போதைப்பொருட்களை விநியோகம் செய்து வந்த சந்தேக நபர்கள் கல்முனை மாநகரில் உள்ள உல்லாச விடுதி ஒன்றில் வைத்து நேற்று (16) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.


மேற்படி இருவரும் 36 வயது மற்றும் 49 வயது மதிக்கத்தக்கவர்களெனவும் கொழும்பு பகுதியில் இருந்து கல்முனைக்கு நீண்ட காலமாக குறித்த போதைப்பொருட்கள் கடத்தி வந்துள்ளனர் எனவும்பொலிஸார் தெரிவித்துள்ளனர்


தற்போது கைதான சந்தேக நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்து வருகின்றனர். அத்துடன் அம்பாறை மாவட்ட வரலாற்றில் மீட்கப்பட்ட பெருமளவிலான ஐஸ் போதைப்பொருட்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது


#citizenmedianetwork #vairalpost

ads