Type Here to Get Search Results !
Developed by Cleverbit

பும்ராவுக்கு ஓய்வு!

 


பும்ராவுக்கு ஓய்வு!



இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.


இதில் எதிர்பாராத திருப்பமாக முதல் இரு டெஸ்டிலும் நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.


இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நாளை (01) ஆரம்பமாகவுள்ளது.


இதனையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


அடுத்த மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பார்டர் கவாஸ்கர் தொடரில் அவருக்கு விளையாடுவதற்காக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


@CM

ads