Type Here to Get Search Results !
Developed by Cleverbit

தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு 03 நாட்கள் செயலமர்வு!


பத்தாவது நாடாளுமன்றத்துக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற முறைமை தொடர்பில் 03 நாட்கள் செயலமர்வை நடத்துவதற்க்கு திட்டமிடப்பட்டுள்ளது. 


இந்த செயலமர்வு எதிர்வரும் 25, 26 மற்றும் 27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக அரசியலமைப்பு சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


எனினும், எதிர்வரும் 18ம் திகதி முதல், 20ம் திகதி வரை, புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. 


இந்தப் பணிகள் காரணமாக எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நாடாளுமன்ற ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 21ம் திகதி காலை 10 மணிக்குக் கூடவுள்ளது. 


@CM

Tags

ads