Type Here to Get Search Results !
Developed by Cleverbit

3 கோடி ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகள் மீட்பு!


துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலைய இறக்குமதி முனையத்திற்கு விமான பொருட்கள் தபால் சேவை ஊடாக பெறப்பட்ட சுமார் 3 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை இலங்கை சுங்கத்தின் தகவல் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் அதிகாரிகள் குழுவினர் கைப்பற்றியுள்ளனர்.


நேற்றிரவு (11) மேற்கொண்ட சோதனையில் குறித்த சிகரெட்டுகள் மீட்கப்பட்டுள்ளன.


கடந்த ஜூலை 13ஆம் திகதி கொழும்பு மட்டக்குளிய பிரதேசத்தில் உள்ள போலி முகவரிக்கு கணனி உபகரணங்கள் என குறிப்பிட்டு இந்த பொதி அனுப்பப்பட்டுள்ளது.


@CM

Tags

ads