இணையத்தின் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் 58 இலங்கையர்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
கிருலப்பனை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு தொகுதி ஒன்றில் வைத்து இன்று அதிகாலை அவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றங்கள் தொடர்பான விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
@CM