மாத்தளை லக்கல பகுதியிலுள்ள, மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் 7 கோடி ரூபாய் பெறுமதியான மாணிக்க கல் கொள்ளையிடப்பட்டுள்ளது.
5 பேர் கொண்ட குழு அந்த வர்த்தகர் மற்றும் அவரது மனைவி ஆகியோரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அதேநேரம், கொள்ளைக்குழுவினர் குறித்த வர்த்தகரின் வீட்டில்; இருந்து மகிழூர்ந்தில் தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த கொள்ளை நடவடிக்கையின் போது, வர்த்தகர் மற்றும் அவரது மனைவியின் கை கட்டப்பட்ட நிலையில் இருந்தாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
தப்பிச் சென்ற மகிழூர்ந்து கலேவல பகுதியில், கைவிடப்பட்ட நிலையில் மீட்கபட்டுள்ளது.
@CM