நியூசிலாந்துக்கு அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் அடைந்த தோல்விக்குத் தாம் உட்பட துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் பொறுப்பேற்பதாக இலங்கை அணித்தலைவர் சரித் அசங்க தெரிவித்துள்ளார்.
போட்டியின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று இடம்பெற்ற குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 19.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 108 ஓட்டங்களைப் பெற்றது.
109 எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நியூசிலாந்து அணியின் துல்லியமான பந்துவீச்சின் காரணமாக 19.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியமை குறிப்பிடத்தக்கது.
@CM