Type Here to Get Search Results !
Developed by Cleverbit

இன்று முதல் பாராளுமன்ற உறுப்பினர்களின் இணையவழி பதிவு ஆரம்பம்!


10வது பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் இணையவழி பதிவு இன்று (17) முதல் வரும் 20ம் திகதி வரை நடைபெறவுள்ளது.


குறித்த நாட்களில் பாராளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்தும் பதிவு செய்ய முடியும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.


இதேவேளை, தேசிய பட்டியலிலிருந்து தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் பெயர் பட்டியலை உடனடியாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.


@CM

Tags

ads