Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து எச்சரிக்கை!


நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரச்சுட்டெண்ணானது இன்றைய தினம் சிறிதளவில் ஆரோக்கியமற்ற மட்டம் வரை உயரக்கூடும் எனத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் சுற்றுச்சூழல் ஆய்வு பிரிவு அறிவித்துள்ளது.


தற்போதைய காலநிலை மற்றும் நாட்டுக்கு வடக்கு திசையிலிருந்து வரும் காற்றின் தன்மை என்பவற்றின் காரணமாகக் காற்றின் தரச்சுட்டெண் 92 முதல் 120 வரையான மட்டத்தில் இன்றைய தினம் காணப்படக்கூடும்.


எனவே, சுவாச ரீதியான பாதிப்புகளைக் கொண்டுள்ளவர்கள் வைத்திய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 


அதேநேரம், எம்பிலிப்பிட்டிய, ஹம்பாந்தோட்டை நுவரெலியா, களுத்துறை, மற்றும் மொனராகலை ஆகிய நகரங்களில் மாத்திரம் இன்றைய தினம் காற்று தரச்சுட்டெண் மத்திம மட்டத்தில் நிலவும் எனத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் சுற்றுச்சூழல் ஆய்வு பிரிவு அறிவித்துள்ளது.


@CM

Tags

ads