Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

க.பொ.த உயர்தரப் பரீட்சை திகதி அறிவிப்பு!

Top Post Ad

 


2024ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 25ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 


இந்தப் பரீட்சைக்கு விண்ணப்பித்த பாடசாலை மாணவர்களின் அனுமதி அட்டைகள் மற்றும் நேர அட்டவணை அந்தந்த பாடசாலை அதிபருக்கும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டை மற்றும் நேர அட்டவணை அவர்களின் தனிப்பட்ட முகவரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


அஞ்சல் மூலமாக அனுமதி அட்டைகளைப் பெறாத தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk இலிருந்து நவம்பர் 18ஆம் திகதி முதல் அவற்றைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


ஏதேனும் திருத்தங்கள் இருப்பின்,அனைத்து பரீட்சார்த்திகளும் http://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்தில் நவம்பர் 18ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிவரை திருத்தங்களைச் செய்யலாம் எனவும்,

பரீட்சை நிலையங்கள் மாற்றப்பட மாட்டாது எனவும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


@CM

ads