Type Here to Get Search Results !
Developed by Cleverbit

அஸ்வெசும கொடுப்பனவு பெறாதவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!


கடந்த காலங்களில் அஸ்வெசும கொடுப்பனவை பெற்றுக் கொள்ளாத குடும்பங்கள் அல்லது தனிநபர்கள் இருப்பின் விசாரணை நடத்தி அவர்களுக்கு நீதி வழங்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.


அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (06) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை ஊடகவியலாளர் அறிவிக்கும் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.


அத்துடன், காரணங்களின்றி குடும்பங்களுக்கு நியாயமான அந்த அஸ்வெசும கொடுப்பனவுகள் கிடைக்காத பட்சத்தில் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஏற்கனவே தயாரித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 


இது தொடர்பில் ஆராய்வதற்காக சமூக சேவைகள் அமைச்சினால் ஏற்கனவே விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.  


@CM

Tags

ads