நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரிக்கென புதிய இடைக்கால நிர்வாக சபை இன்று 2024.12.11 நியமிக்கப்பட்டுள்ளது.
நிந்தவூர் ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை, நிந்தவூர் ஜம்மியத்துல் உலமா, நிந்தவூர் சகாத் சபை, காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் பழைய மாணவர் பிரதிநிதிகள், பெற்றார் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், சமூக சேவையாளர்கள் என 10 பேர் கொண்ட இடைக்கால நிர்வாக சபை ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது
சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற கௌரவ நீதிபதி அவர்களின் 2024.12.02 ந் திகதிய கட்டளைப் பிரகாரம் இந்த இடைக்கால நிர்வாக சபையினரிடம் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன
கடந்த 43 வருட காலமாக இப்பிராந்தியத்தில்
ஆத்மீக கல்விக்காக மகத்தான பங்களிப்பை வழங்கி வரும் நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் வரலாற்றில் மிகவும் கவலைக்குரிய பக்கங்கள் பதிவாகியுள்ள இக் காலகட்டத்தில், இக் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பித்து, அதனை சீராக முன்னெடுப்பதற்கு வசதியாக சகல நிர்வாக பொறுப்புக்களும் இந்த இடைக்கால நிர்வாக சபையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த இடைக்கால நிர்வாக சபையின்
01. தலைவர்: நிந்தவூர் ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அல் ஹாஜ் எம் ஏ எம் றசீன்(உதவி கல்வி பணிப்பாளர்)
செயலாளர்: அஷ்ஷெய்க் மௌலவி ஏ எல் எம் அபிர்ஷாத், (காஷிபி)
உபசெயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா - நிந்தவூர் கிளை
03. பொருளாளர்: அல் ஹாஜ் ஏ ஆதம்பாவா (பொறியியலாளர்)
பொருளாளர், நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணி
04. உப தலைவர் அஷ்ஷெய்க் மௌலவி ஏ டபிள்யூ எம் ஹலிமுத்தீன், (பலாஹி)
அதிபர் , பலாஹ் மனன கலாபீடம்
05. இணைச் செயலாளர்:
அஷ்ஷெய்க் மௌலவி எம் ஏ எம் சிபான் (காஷிபி)
பழைய மாணவர்
நிர்வாக சபை உறுப்பினர்களாக :
06. ஏ எம் றிஸ்வி, (பெற்றார் பிரதிநிதி)
07. அஷ்ஷெய்க் மௌலவி ஏ எப் எம் இர்ஷாத் (காஷிபி) பழைய மாணவர்
பேஷ் இமாம், பலாஹ் ஜும்ஆ பள்ளிவாயல்
08. ஐ எம் நிஸ்மி (சமூக சேவையாளர் - முகாமைத்துவ உதவியாளர் SLTB)
09. ஐ எம் ஜவ்பர் (சமூக செயற்பாட்டாளர் - அபிவிருத்தி உத்தியோகத்தர்)
10. அஷ்ஷெய்க் மௌலவி எஸ் றஹ்பி (ஹிழ்ரி)
அதிபர் , இப்னு மஸ்ஊத் மனன கலாபீடம்.
பேஷ் இமாம், அப்ரார் பள்ளிவாயல்.
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் இடைக்கால காலத்தில் கல்லூரி திறம்பட இயங்க பிரார்த்தித்து வாழ்த்துகின்றோம்.
@CM