Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

வரி செலுத்துவோருக்கு விசேட அறிவித்தல்!

Top Post Ad


2023 - 2024ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி விபரத்திரட்டை சமர்ப்பிக்கும் இறுதி தினம் இன்றாகும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.


அதன்படி, இணையவழி முறைமையில் மாத்திரம் வருமான வரி விபரத் திரட்டை சமர்ப்பிக்குமாறு அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதான அலுவலகம், பிராந்திய மற்றும் நகர அலுவலகங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன.


அத்துடன், வருமான வரியைச் செலுத்துவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் ஜாவத்தை பகுதியில் உள்ள இலங்கை வங்கியின் கிளை என்பன திறக்கப்பட்டுள்ளதாகவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. 


@CM

Tags

ads