Type Here to Get Search Results !
Developed by Cleverbit

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு இடைநிறுத்தம்!


 காலி - கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர்களால் நேற்றிரவு முதல் முன்னெடுக்கப்பட்டுவந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. 


வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்குப் பொறுப்பான விசேட வைத்தியர் வைத்தியசாலையில் உள்ள பல வைத்தியர்களை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தையடுத்து இந்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டது.


இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த வைத்தியரை வேறு வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்வதாகச் சுகாதார அமைச்சின் செயலாளர் உறுதியளித்திருந்தார்.


அதனடிப்படையில் பணிப்புறக்கணிப்பை இடைநிறுத்தியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலை கிளையின் செயலாளர் வைத்தியர் அசங்க கோனார தெரிவித்துள்ளார்.


@CM

Tags

ads