Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

சாரதிகளுக்கு தொடரூந்து திணைக்களம் விடுத்துள்ள கோரிக்கை!


தொடருந்து கடவைகள் ஊடாக வாகனங்களைச் செலுத்தும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு தொடருந்து திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.


அந்த திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


ஒலி மற்றும் ஒளி சமிக்ஞைகளைக் கொண்ட தொடருந்து கடவைகளில் கடந்த காலங்களில் அதிகளவான விபத்துக்கள் பதிவாகியுள்ளன.


இந்தநிலையில், வாகன சாரதிகளின் கவனக் குறைவே குறித்த தொடருந்து விபத்துக்களுக்குக் காரணமாகும் எனத் தொடருந்து திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.


@CM

Tags

ads