Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை தேசியத்தில் வரலாற்றுச் சாதனை!

 





கல்வி அமைச்சுடன் இணைந்து இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் சங்கம் நடாத்தும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட 53வது சேர் ஜோன் ரபட் மெய்வல்லுனர் சம்பியன்சிப்-2024. கடந்த நவம்பர் 18,19,20  ஆகிய மூன்று நாட்களாக மாத்தறை கொடவில விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தேசிய மட்ட 53வது சேர் ஜோன் றபட் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் அல்- அஸ்ரக் தேசிய பாடசாலை சார்பாக 12 வயதுப்பிரிவைச் சேர்ந்த

Mohamed Haris Mohamed Hinzan  ஓட்டப்பந்தயம் 80M நிகழ்ச்சியில் 11. 00 Sec மற்றும் ஓட்டப்பந்தயம் 100M நிகழ்ச்சியில் 14.00 Sec வினாடியில் ஓடி முடித்து இரு நிகழ்ச்சியிலும் 03ம் இடத்தைப் பெற்று இரண்டு வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.


அதேவேளை

மற்ற மாணவர் 13 வயதுப்பிரிவைச் சேர்ந்த Nihal Ahamed Sibny Ahamed  ஓட்டப்பந்தயம் 100M நிகழ்ச்சியில் 13.30 Sec ஓடி முடித்து திறமைச்சான்றிதழ் வென்றார்.


குறிப்பு:

2002 ஆண்டு பழைய மாணவர் தற்போது விளையாட்டு பயிற்றுவிப்பாளராக பணியாற்றும் N.Mohamed Nifras நீளம் பாய்தலில் வெள்ளிப்பதக்கம் வென்றார் அதன் பின்னர் சுமார் 22 வருடங்களின் பின் சேர் ஜோன் ரபட் போட்டியில் கிடைத்த தேசியமட்ட பதக்கம் இதுவாகும்.


ஊர் திரும்பிய வீரர்களை இன்று (22) பாடசாலையின் முகாமைத்துவக் குழு அதிபர் தலைமையில் வீரர்களுக்கு மாலை அணிவித்து பாராட்டி கௌரவிக்கப்பட்டது.


@CM

ads