தொடரூந்து மிதிபலகையில் பயணித்த இளைஞர் ஒருவர் சமிக்ஞை கம்பத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று கிரிபத்கொடை பகுதியில் பதிவானது.
பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த அதிவேக தொடருந்தின் மிதிபலகையில் பயணித்த இளைஞரே உயிரிழந்துள்ளார்.
கனேமுல்ல பிரதேசத்தில் வசித்துவந்த 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
@CM