Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

இலண்டனில் இருந்து நாடு திரும்பினார் Dr. PM. Arshath Ahamed.


இலண்டனிலிருந்து நாடு திரும்பிய Dr. PM. Arshath Ahamed (MBBS, MD, MRCPCH), தற்போது தனது திறமையான சேவைகளை இலங்கையில் தொடர இருக்கிறார். 


குழந்தை நலத்தில் சிறந்து திகழும் அவர், தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் குழந்தை நல விஷேட வைத்திய நிபுணராக தனது பணிகளை பொறுப்பேற்றுள்ளார்.


இதனுடன், நிந்தவூர் ஆதார வைத்தியசாலையிலும் அவரது மருத்துவ சேவையைகளை மக்கள் பெற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.


 குழந்தைகளின் நலனுக்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படும் Dr. Arshath Ahamed, நமது சம்மாந்துறை மற்றும் நிந்தவூர் பிரதேச மக்களுக்கு மட்டுமல்லாமல் வழமை போன்று நமது பிராந்தியத்திற்கே சிறந்த சேவையாற்ற வேண்டும்.


இவரின் அனுபவம் மற்றும் நிபுணத்துவம், நமது சமுதாயத்தில் குழந்தைகளின் நலனுக்கான அடிப்படைகளை மேலும் உறுதியாக்கும் என நம்பப்படுகிறது.


@CM

Tags

ads